search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனில் செத்ரி"

    இந்திய கால்பந்து அணியின் கேப்டனான சுனில் செத்ரிக்கு இந்தாண்டுக்கான சிறந்த கால்பந்து வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது. #SunilChhetri #IndianFootballerAward2018

    கொல்கத்தா:

    இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக ஐதராபாத் நகரை சேர்ந்த சுனில் செத்ரி செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

    சமீபத்தில் நடந்த கண்டங்களுக்கிடையேயான கால்பந்து கோப்பையை இந்தியா கைப்பற்றியது. கென்யாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சுனில் செத்ரி இரண்டு கோல்கள் அடித்தார். இதன்மூலம் சுனில் சேத்ரி கால்பந்து போட்டிகளில் மொத்தம் 64 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா வீரர் மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளார்.

    அவரது இந்த சாதனையை பாராட்டும் வகையில் இந்தாண்டுக்கான சிறந்த இந்திய கால்பந்து வீரர் விருது சுனில் செத்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இன்று நடந்த விருது வழங்கும் விழாவில் இந்திய கால்பந்து சம்மேளனத்தில் துணை தலைவர் சுப்ரதா தத்தா சுனில் செத்ரிக்கு விருதை வழங்கினார்.

    இந்த விழாவில் சுனில் செத்ரியில் மாமனாரும், முன்னணி கால்பந்து பயிற்சியாளருமான சுப்ரதா பட்டாச்சாரியா கலந்துகொண்டார். #SunilChhetri #IndianFootballerAward2018
    மும்பையில் நேற்று நடைபெற்ற கென்யா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு கேப்டன் சுனில் செத்ரி நன்றி தெரிவித்துள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    மும்பை: 

    மும்பையில் நடைபெற்று வரும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் நேற்று மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

    இப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் 100வது சர்வதேச போட்டியில் களமிறங்கிய சுனில் செத்ரி இரண்டு கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர். 

    இந்த போட்டிக்கு மக்கள் கொடுத்த ஆதரவுக்கு இந்திய அணியின் 
    கேப்டன் சுனில் செத்ரி நன்றி தெரிவித்துள்ளார். 



    இதுகுறித்து டுவிட்டரில் சுனில் செத்ரி கூறியிருப்பதாவது:-

    இன்றைய போட்டியில் கிடைத்த ஆதரவு நாட்டிற்காக விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் கிடைத்தால், மைதானத்தில் எங்கள் உயிரையும் கொடுப்போம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்தியா, இந்த இரவு சிறப்பானது, ஏனெனில் நாம் இன்று ஒன்றாக இருந்தோம். மைதானத்திற்கு வந்து ஆரவாரம் செய்தும், வீட்டில் இருந்தும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup 
    கென்யா அணியுடனான கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #SachinTendulkar #SunilChhetri #Chhetri100 #INDvKEN #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    மும்பை:

    இந்தியா, கென்யா, சீன தைபே, நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளின் கால்பந்து அணிகள் பங்குபெறும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை மும்பையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் சுனில் செத்ரி 2 கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர். 

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய கால்பந்து அணிக்கும், 100வது போட்டியில் இரு கோல்கள் அடித்து அசத்திய சுனில் செத்ரிக்கும் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தேவைப்பட்ட சிறப்பான வெற்றி இது. நன்றாக விளையாடினீர்கள், இந்தியா. 100-வது போட்டி, இரு கோல்கள் என்பது சிறந்த சாதனை, சுனில் செத்ரி”, என சச்சின் கூறியுள்ளார்.



    ஏற்கனவே சுனில் செத்ரி போட்டியை காண வருமாறு ரசிகர்களுக்கு விடுத்த கோரிக்கைக்கு சச்சின் ஆதரவாக பதிவு செய்திருந்தார். நேற்றைய போட்டியை காண 8 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கென்யா அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில், இரண்டு கோல் அடித்த இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி, அர்ஜெண்டினா வீரர் மெஸ்சியின் அதிக சர்வதேச கோல்கள் சாதனையை நெருங்கியுள்ளார். #SunilChhetri #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup

    மும்பை: 

    மும்பையில் நடைபெற்று வரும் இண்டர்காண்டினெண்டல் கோப்பை கால்பந்து தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் இந்தியா - கென்யா அணிகள் நேற்று மோதின. இது இந்திய அணியின் கேப்டன் சுனில் செத்ரியின் 100-வது சர்வதேச போட்டியாகும். இந்த போட்டியில் செத்ரிக்கு ஆதரவளிக்க ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண வந்தனர். இந்த போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து விட்டது.

    இப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் சுனில் செத்ரி இரண்டு கோல்களும், ஜேஜே ஒரு கோலும் அடித்தனர். இந்த போட்டியில் அடித்த இரண்டு கோல்கள் உட்பட சுனில் செத்ரி இதுவரை சர்வதேச போட்டிகளில் 61 கோல்கள் அடித்துள்ளார். 

    இதன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் அதிக கோல் அடித்த தற்போதைய வீரர்கள் பட்டியலில், ஸ்பெயினின் டேவிட் வில்லாவை (59 கோல்கள்) பின்னுக்கு தள்ளி சுனில் சேத்ரி (61 கோல்கள்) மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்த பட்டியலில் போர்ட்டுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (81 கோல்கள்), அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி (64 கோல்கள்) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். 



    செத்ரி இன்னும் நான்கு கோல்கள் அடித்தால் மெஸ்சியை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடத்தை பிடிப்பார். இந்திய அணி 7-ம் தேதி நடைபெறும் லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அதன்பின் 10-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணி ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இதனால் மெஸ்சியை, சுனில் செத்ரி விரைவில் பின்னுக்கு தள்ள அதிக வாய்ப்பு உள்ளது. #Chhetri100 #WeAreIndia #BackTheBlue #AsianDream #IntercontinentalCup 
    ×